search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சென்னை மாணவி"

    போலீஸ் இன்ஸ்பெக்டர் 4 மணி நேரம் நிற்கவைத்து பாலியல் தொல்லை கொடுத்ததாக சிறுமி வழக்கு தொடர்ந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #TNPolice
    சென்னை:

    சென்னை சூரப்பட்டு பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் முதல் கணவரை விவாகரத்து செய்துவிட்டு ஜெயகரன் வாசுதேவன் என்பவரை 2-வதாக திருமணம் செய்து கொண்டார். அந்த பெண்ணுக்கு ஏற்கனவே 17 வயதில் சிறுமி உள்ளார்.

    இந்த நிலையில் சிறுமிக்கு தாயின் 2-வது கணவரான ஜெயகரன் வாசுதேவன் பாலியல் தொல்லை கொடுத்தார். இதுபற்றி போலீசில் புகார் செய்யப்பட்டது. ஆனால், நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

    இதற்கிடையே ஜெயகரன் வாசுதேவன், ‘ஆன்லைன்’ மூலம் போலீசாருக்கு தனது மனைவி மோசடி செய்ததாக புகார் அளித்தார். இது தொடர்பாக அப்போது புழல் போலீசில் இன்ஸ்பெக்டராக இருந்த நடராஜன் விசாரணை நடத்தினார். அவர், விசாரணைக்காக போலீஸ் நிலையம் வந்த சிறுமிக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்தார்.

    இதுதொடர்பாக போலீஸ் அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட சிறுமியும், அவரது தாயும் தங்களுக்கு தொல்லை தரும் 2-வது கணவர் ஜெயகரன் வாசுதேவன், போலீஸ் இன்ஸ்பெக்டர் நடராஜன் மீது நடவடிக்கை எடுக்ககோரி திருவள்ளூர் மகளிர் கோர்ட்டில் நேற்று வழக்கு தெடர்ந்தனர்.

    வழக்கை விசாரித்த நீதிபதி பரணிதரன் வருகிற 10-ந்தேதி விசரணைக்கு எடுத்துக்கொள்வதாக தெரிவித்துள்ளார்.

    கோர்ட்டில் சிறுமி தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    விசாரணைக்காக சென்றபோது நீ அழகாக இருக்கிறாய் என்று இன்ஸ்பெக்டர் நடராஜன் என்னை அழைத்தார். நான் பயந்து தூரமாக நின்றேன். அப்போது என் கையை பிடித்து இழுத்தார். நான் சத்தம் போடுவேன் என்று கூறினேன். அதற்கு அவர் இது போலீஸ் ஸ்டேசன் யாரும் இங்கு வரமாட்டார்கள் என்றார். அப்போது ஜெயகரனும் பக்கத்தில் இருந்தார்.

    நான் அவமானத்தால் கண் கலங்கி உருகிப்போய் விட்டேன். அந்த இடத்திலேயே இறந்துவிடலாம் என்று தோன்றியது. நீயும் உன் அம்மாவைப் போல் இரண்டு, மூன்று திருமணம் செய்துகொள்ள ஆசையா? அதற்கு நான் ‘ஓகே’ வா என்று கூறி என்னை நான்கு மணி நேரம் நிற்க வைத்து உற்று பார்த்தார்.

    நான் கூறியதை போல் செய்தால் உன்னை மட்டும் விட்டுவிடுகின்றேன் என இரட்டை அர்த்தங்களினால் என்னிடம் ஆபாச வார்த்தைகளால் பேசினார்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இதற்கிடையே பாதிக்கப்பட்ட சிறுமி கடந்த 26.11.18 அன்று சென்னை போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தில் கொடுத்துள்ள புகார் மனுவும் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த மனுவில் சிறுமி கூறியிருப்பதாவது:-

    எனது தாய்க்கும் ஜெயகரன் என்பவருக்கும் கடந்த 5.10.2017 அன்று வடபழனி கோயிலில் 2-வது திருமணம் நடைபெற்றது. என் அம்மா மீது அன்பாக இருப்பதை போல் நடித்து எனக்கு அவர் பாலியல் ரீதியாக நிறைய துன்புறுத்தல்களை செய்து வந்தார். எனது சிறிய ஆடைகளை ஆன்லைனில் வாங்கிக் கொடுத்தார். என்னை தீய எண்ணத்துடன் பார்த்து வந்தார்.

    செல்போனில் ஆபாச படங்களையும் காட்டினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் எனது தாயை அடிக்கவும், துன்புறுத்தவும் ஆரம்பித்தார்.

    கடந்த செப்டம்பர் மாதம் எங்கள் மீது ஜெயகரன் வாசுதேவன் ஆன்லைனில் புகார் செய்திருப்பதாகவும் அதனால் எங்களை விசாரணைக்கு வரவேண்டும் என்று என்னையும், எனது தாயையும் இன்ஸ்பெக்டர் நடராஜன் போலீஸ் நிலையத்துக்கு அழைத்தார்.

    அப்போது அவர் இரட்டை அர்த்தங்களினால் என்னிடம் ஆபாச வார்த்தைகள் பேசினார். நான் அழுத போதும் என்னை விடவில்லை. என்னையும் தாயையும் மாலை 6.30 மணி வரை போலீஸ் நிலையத்தில் சட்டத்துக்கு முரணாக வைத்தார்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    போலீஸ் இன்ஸ்பெக்டர் மீது பாலியல் தொல்லை கொடுத்ததாக சிறுமி வழக்கு தொடர்ந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. குற்றச்சாட்டுக்கு உள்ளான இன்ஸ்பெக்டர் நடராஜன் தற்போது வேறு ஒரு காவல் நிலையத்தில் பணியாற்றி வருகிறார்.

    கோர்ட்டில் வழக்கு உள்ளதால் இன்ஸ்பெக்டர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுப்பது குறித்து போலீஸ் உயர் அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகிறார்கள். விரைவில் அவர் மீது நடவடிக்கை பாயும் என்று தெரிகிறது. #TNPolice
    திருவண்ணாமலை வேளாண்மை கல்லூரியில் படித்து வரும் சென்னை மாணவி கொடுத்த பாலியல் புகார் தொடர்பாக கல்லூரி முதல்வர் உள்பட 6 பேர் மீது 10 பிரிவுகளின் கீழ் மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். #ChennaiStudentharassment #AgriCollege
    தண்டராம்பட்டு:

    திருவண்ணாமலையை அடுத்த வாழவச்சனூர் வேளாண்மை கல்லூரியில் சென்னை பெருங்குடியை சேர்ந்த கிரிஜா என்ற மாணவி பி.எஸ்.சி. 3-ம் ஆண்டுபடித்து வந்தார்.

    மாணவி கிரிஜாவுக்கு உதவி பேராசிரியர் தங்க பாண்டியன், 7 மாதங்களாக பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாக குற்றச்சாட்டு கூறப்பட்டது.

    மாவட்ட நீதிபதி மகிழேந்தியிடம் மாணவி கிரிஜா இது தொடர்பாக புகார் அளித்தார். இதனையடுத்து பேராசிரியர் சஸ்பெண்டு செய்யப்பட்டார். மாணவி தங்கி இருந்த விடுதியில் வார்டனர்களாக இருந்த பேராசிரியைகள் மைதிலி, புனிதா ஆகியோரும் பேராசிரியருக்கு ஆதரவாக செயல்பட்டதாக கூறப்பட்டது.



    இது தொடர்பாக, ஏ.டி.எஸ்.பி. வனிதா தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர். இந்த விவகாரத்தில் கல்லூரி நிர்வாகம் பாலியல் புகாரில் சிக்கிய பேராசிரியர் மற்றும் பேராசிரியைகளுக்கு சாதகமாக செயல்பட்டது தெரிய வந்தது.

    மாணவிகள் விடுதிக்குள் பேராசிரியர்கள், ஆண்கள் செல்ல அனுமதி கிடையாது. வேளாண்மை பல்கலைக்கழக விதிமுறைகள் முற்றிலும் மீறப்பட்டுள்ளது. பேராசிரியரின் அத்துமீறல்கள் குறித்து மாணவி, கல்லூரி நிர்வாகத்திடம் தான் முதலில் புகார் கூறியுள்ளார்.

    அப்போது, மாணவியை சமரசப்படுத்தும் முயற்சியில் கல்லூரி முதல்வர் ஈடுபட்டார். கல்லூரி பெயர் கெட்டு போய்விடும் என்பதால், கல்லூரி நிர்வாகம் மாணவியின் புகாரை மூடிமறைக்க திட்டமிட்டது.

    கல்லூரி நிர்வாகத்தின் சமரசத்தை ஏற்று கொள்ளாத மாணவி, வெளிப்படையாக பேராசிரியர் மீது பாலியல் புகார் தெரிவிக்க போவதாக கூறினார். இதையடுத்து பேராசிரியைகள் மைதிலி, புனிதா ஆகியோர் மாணவியை சமரசப்படுத்த அனுப்பப்பட்டனர்.

    மாணவி அடிப்பணியாததால், ஆத்திரமடைந்த பேராசிரியைகள் 2 பேரும், மிரட்டியுள்ளனர். மாணவிக்கு எதிராக ஆதாரங்களை ஜோடித்தனர். இதற்காக, விடுதியில் உள்ள மாணவிகள் 2 பேர் மூலம் மாணவியிடம் ‘ராகிங்’ செய்து இடையூறுகளை ஏற்படுத்தினர்.

    இப்படி செய்வதால், உதவி பேராசிரியர் மீது புகார் அளிக்கவிடாமல் மாணவியை தடுக்க முடியும் என பேராசிரியைகள் நினைத்தனர். ஆனால், மாணவி ‘ராகிங்’ கொடுமைக்கு அஞ்சவில்லை. தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தார்.

    அதன்பிறகு, மாணவி கிரிஜாவை அதிகமாக தொந்தரவு செய்தனர். மாணவி தங்கியிருந்த அறையின் உள் தாழ்ப்பாள், வெளித் தாழ்பாள் உடைக்கப்பட்டது. மாணவியுடன் தங்கியிருந்த மற்ற மாணவிகள் வேறு அறைகளுக்கு மாற்றப்பட்டனர்.

    தனிமைப்படுத்தப்பட்ட மாணவி இரவில் அறையை பூட்டிக்கொண்டு தூங்க முடியாமல் தவித்தார். நள்ளிரவில் மாணவி தூங்கி கொண்டிருக்கும் வேளையில் தங்களுக்கு ஆதரவாக இருந்த 2 மாணவிகள் மூலம் பேராசிரியைகள் மாணவியை பல்வேறு கோணங்களில் போட்டோ மற்றும் வீடியோ எடுத்தனர்.

    மாணவி வெளியிட்ட ஆடியோவில் பேராசிரியைகள் தங்களிடம் உன்னை பற்றிய ரகசியங்கள் உள்ளன. அதை வெளியிடுவோம் என்று மிரட்டியதும் இந்த போட்டோ, வீடியோக்களை வைத்து தான் என்று தெரிய வந்தது.

    இதையடுத்து, பாலியல் புகார் கூறிய மாணவி கிரிஜா திருச்சி நாவலூர் குட்டப்பட்டு பகுதியில் உள்ள அன்பில் தர்மலிங்கம் வேளாண் கல்லூரிக்கு மாற்றப்பட்டார். பாலியல் தொல்லைக்கு உடந்தையாக இருந்த பேராசிரியைகள் 2 பேர் வெவ்வேறு கல்லூரிகளுக்கு மாற்றப்பட்டனர்.

    திருச்சி கல்லூரிக்கு தன்னை மாற்றிய கோவை வேளாண் பல்கலைக்கழக ஆணையை மாணவி ஏற்கவில்லை. பாதிக்கப்பட்ட தனக்கு நியாயம் கிடைக்கும் வேண்டும். அதுவரை திருவண்ணாமலை கல்லூரியில் தான் படிப்பேன் என்று திட்டவட்டமாக கூறினார்.

    இதைத்தொடர்ந்து, பாலியல் புகார் கூறிய மாணவி கிரிஜா கல்லூரியில் இருந்து கடந்த 1-ந்தேதி அதிரடியாக நீக்கப்பட்டார்.

    இந்த நிலையில் மாணவி கிரிஜா கொடுத்த புகாரின் பேரில் கல்லூரி முதல்வர் ராஜேந்திரன், உதவி பேராசிரியர் தங்கபாண்டியன், 2 உதவி பேராசிரியைகள் மற்றும் 2 மாணவிகள் என 6 பேர் மீதும் மானபங்கம், கொலைமிரட்டல், அவதூறாக பேசியது உள்பட 10 பிரிவுகளின் கீழ் திருவண்ணாமலை மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
     
    இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #ChennaiStudentharassment #AgriCollege

    கோவை அரசு தொழில் நுட்ப கல்லூரி தர வரிசை பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. இதில் எம்.சி.ஏ. பிரிவில் சென்னை மாணவி நித்யா 70.333 மதிப்பெண் பெற்று முதலிடம் பிடித்தார்.
    கோவை:

    கோவை தடாகம் ரோட்டில் அரசு தொழில் நுட்ப கல்லூரி உள்ளது. இக்கல்லூரியில் எம்.பி.ஏ., எம்.சி.ஏ. சேர்க்கைக்கான மாநில அளவிலான தரவரிசை பட்டியல் இன்று வெளியிடப்பட்டது.

    இந்த தர வரிசை பட்டியலை அரசு தொழில் நுட்ப கல்லூரி முதல்வரும், தமிழ்நாடு எம்.பி.ஏ., எம்.சி.ஏ., மாணவர் சேர்க்கை செயலாளருமான கே. தாமரை வெளியிட்டார்.

    இதனை ஒருங்கிணைப்பாளர் புருசோத்தமன் பெற்று கொண்டார்.

    இதில் எம்.சி.ஏ. பிரிவில் சென்னை மாணவி நித்யா 70.333 மதிப்பெண் பெற்று முதலிடம் பிடித்தார். சென்னை மாணவர் ஹரீஷ் 67. 667 மதிப்பெண்ணுடன் 2-ம் இடமும், ராகுல் பாபு 61.667 மதிப்பெண்ணுடன் 3-ம் இடமும் பிடித்தனர்.

    எம்.பி.ஏ. பிரிவில் சென்னை மாணவி கார்த்திகா 80.667 மதிப்பெண்ணுடன் முதலிடமும், பாளையங்கோட்டை மாணவி ரேஷ்மி 80.000 மதிப்பெண்ணுடன் 2-வது இடமும், ஈரோடு மாணவி கார்த்திகா 78.333 மதிப்பெண்ணுடன் 3-வது இடமும் பிடித்தனர்.

    எம்.சி.ஏ. படிப்பிற்கான கவுன்சிலிங் வருகிற 25-ந் தேதி தொடங்கி 28-ந் தேதி வரை நடைபெறுகிறது. இதில் 1,552 மாணவர்கள் பங்கேற்கிறார்கள்.

    எம்.பி.ஏ. படிப்பிற்கான கவுன்சிலிங் வருகிற 29-ந் தேதி தொடங்கி ஆகஸ்டு 4-ந் தேதி வரை நடைபெறுகிறது. இதில் 6,255 மாணவர்கள் கலந்து கொள்கிறார்கள்.

    டான்செட் தேர்வு எழுதி விண்ணப்பிக்க தவறிய மாணவர்களுக்கு கடைசி நாளில் கலந்தாய்வு நடக்கிறது.
    ‘நீட்’ தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றதால் வீட்டைவிட்டு வெளியேறி மாயமான மாணவி கோட்டீஸ்வரியை போலீசார் பீகார் ஓட்டலில் இருந்து மீட்டனர்.
    அம்பத்தூர்:

    சென்னை நம்மாழ்வார் பேட்டையை சேர்ந்தவர் கோட்டீஸ்வரி (வயது 19). இவர் ஏற்கனவே ஒரு முறை நீட் தேர்வு எழுதியதில் மதிப்பெண் அடிப்படையில் பல் மருத்துவ கல்லூரியில் சேர்வதற்கான இடம் கிடைத்தது.

    அதை ஏற்காத அவர் எம்.பி.பி.எஸ். படிக்க வேண்டும் என்ற ஆசையில் தற்போது மீண்டும் நீட் தேர்வு எழுதினார். ஆனால் கடந்த முறையை விட இப்போது குறைவான மதிப்பெண்களே கிடைத்தது.

    இந்த நிலையில் மாணவி கோட்டீஸ்வரி திடீரென்று மாயமானார். இதுபற்றி அவரது பெற்றோர் தலைமை செயலக காலனி போலீசில் புகார் செய்தனர். இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி வழக்கு பதிவு செய்து மாணவியை தேடி வந்தார். கோட்டீஸ்வரி மாயமான போது தனது பெற்றோருக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பி இருந்தார். அதில் ‘நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றதால் வீட்டை விட்டு வெளியேறி விட்டேன். என்னை யாரும் தேட வேண்டாம்’ என்று கூறி இருந்தார்.

    போலீசார் விசாரணை நடத்தியதில் அவர் சென்ட்ரலில் இருந்து ரெயிலில் ஏறி எங்காவது சென்றிருக்கலாம் என்று தெரிய வந்தது. அதன்படி போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

    இந்த நிலையில் மாணவி கோட்டீஸ்வரி பீகாரில் உள்ள ஒரு ஓட்டலில் தங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் பீகாருக்கு சென்றனர். அங்கு ஓட்டலில் தங்கியிருந்த கோட்டீஸ்வரியை மீட்டனர்.

    ×